Wednesday, July 24, 2024
HomeTamilமாமன்னனை நான் கண்டுணர்ந்தது இந்த நொடி தான்.. மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி வீடியோ!!

மாமன்னனை நான் கண்டுணர்ந்தது இந்த நொடி தான்.. மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி வீடியோ!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலு பாடும் பாடல் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான். நன்றி வடிவேலு சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மாமன்னன்’ திரைப்படம் ஜூலை 27-ம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular