கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கோட்டை ரயில் நிலையத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால், அனைத்து ரயில் சேவைகளும் ரத்தாகியுள்ள பின்னணியில், பயணிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்ற காரணத்தை கருத்திற் கொண்டே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.