Wednesday, July 24, 2024
HomeTamilபால் ,தேநீர் விலை 10 ரூபாவால் குறைப்பு!!

பால் ,தேநீர் விலை 10 ரூபாவால் குறைப்பு!!

யாழ். மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை (08) முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். வணிகர் கழகத்தில் இன்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபா குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுவருடத்துக்கு பின்னர் உணவுப்பொதிகள், வேறு உணவுப்பண்டங்கள் தொடர்பான விலைகள் தொடர்பாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில், பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் குறித்த விலைக்குறைப்பு அமுலாகுவதாக அவர் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் வெதுப்பக பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என ஊடகங்களில், வெளியான செய்திகளை அடுத்து, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular