Saturday, July 20, 2024
HomeTamil2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!!

2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!!

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கிகளுக்கான உரிமங்களை புதுப்பித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, துப்பாக்கிகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமத்தை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் www.defence.lk என்ற இணையத்தளத்தில் தகவல் மற்றும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

டிசம்பர் 31, 2023க்குப் பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22ஆவது சட்டத்தின்படி, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், 2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல்
ஒக்டோபர் 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை மேற்கொள்ளப்படும்.

காலக்கெடுவிற்குப் பின்னர் செய்யப்படும் எந்தவொரு புதுப்பித்தல்களும் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular