Saturday, July 20, 2024
HomeTamilயாழில் கைப்பேசி கொள்ளை : இரு சந்தேகநபர்கள் கைது !

யாழில் கைப்பேசி கொள்ளை : இரு சந்தேகநபர்கள் கைது !

யாழில் கையடக்க தொலைபேசி கொள்ளைச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட கையடக்க தொலைபேசியின் உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்றைய தினம் யாழ் பரமேஸ்வரா சந்தியில் கையடக்க தொலைப்பேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சீ.சி.ரீவி கெமரா காணொளிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில் சந்தே நபர் குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி திருத்தும் நிலையத்திற்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையிட்ட கைப்பேசியை பிரிதொரு நபருக்கு விற்பனை செய்த நிலையில் வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular