Wednesday, July 24, 2024
HomeTamilடிக்டொக் செயலியில் புதிய கட்டுப்பாடுகள்!

டிக்டொக் செயலியில் புதிய கட்டுப்பாடுகள்!

டிக்டொக் செயலியை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அடுத்த வாரமளவில் டிக்டொக் செயலி பற்றிய புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை, உத்தியோகபூர்வ சாதனங்களில் இருந்து டிக்டொக் செயலி நீக்கப்படுவதாக
கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் தலைமை தகவல் அதிகாரியின் மதிப்பாய்வை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த செயலி தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசாங்கத்தின் பேச்சாளர் அறிக்கை விடுத்து அறிவித்துள்ளார்.

இந்த முடிவால் தங்களது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டிக்டொக் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணைக்குழு இவ்வாறான தடையை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கனடா தங்களது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயலியை சுற்றியுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் போதுமான அவதானம் உள்ளதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular