Wednesday, July 24, 2024
HomeTamilபுகைப்பரிசோதனை இல்லை!

புகைப்பரிசோதனை இல்லை!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகை சோதனைக்கு உட்படுத்தப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புகைப் பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் இந்த வாரத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக தற்போது இந்த புகைப் பரிசோதனைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் ஜனவரி முதல் இந்தப் புகைப் பரிசோதனையைக் கைவிட முடிவு செய்துள்ளோம் .

ஒன்று எரிபொருளின் தரம். கேள்விக்குறியாக உள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தரமான எரிபொருள் வழங்கப்படுவதில்லை .

இன்னொன்று இந்த லங்கமவில் புகைப் பரிசோதனை இல்லை. அரசு வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை இல்லை.

எனவே, வரும் ஜனவரி மாதம் முதல் எங்கள் பேருந்துகளையும் புகைப் பரிசோதனையில் இருந்து நீக்குமாறு போக்குவரத்து அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular