Saturday, July 20, 2024
HomeTamilஇறக்கும் தருவாயில் ஏழுபேரின் உயிரை காபாற்றிய மாணவி!!

இறக்கும் தருவாயில் ஏழுபேரின் உயிரை காபாற்றிய மாணவி!!

மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் கண்களின் சவ்வுகள் மேலும் மூன்று பேரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியுள்ளன.

விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் மொத்தம் 7 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் அறுவை சிகிச்சை இலங்கையின் சிறப்பு வைத்தியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையிலிருந்த ஒருவருக்கு இந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த உறுப்புகள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இலங்கையில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular