Monday, December 4, 2023
HomeTamilஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் - சாணக்கியன்

ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் – சாணக்கியன்

தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று (27) பிற்பகல் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.

பொதுமக்களின் நன்மை கருதியில்லாமல் அவர் காணி ஏதாவது விற்பனை செய்வதற்கே அவசரமாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular