பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரித்த காரணத்தால் இவற்றின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை தெரிவித்தார்.
கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும், குளிர்சாதனப் பெட்டிகளில் தங்களுடைய பொருட்களை வைப்பதற்கு பெரும் செலவினங்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.