Saturday, July 20, 2024
HomeTamilபொருட்களின் விலைகள் குறைப்பு!!

பொருட்களின் விலைகள் குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 650 ரூபாவாகும்.

இதேவேளை, உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 545 ரூபாவாகும்.

ஒரு கிலோ பயறு விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்திலி விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.

ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular