Saturday, July 20, 2024
HomeTamilமுக்கிய சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை!!

முக்கிய சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை!!

பயன்படுத்தப்படும் சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஜூன் முதலாம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் குடிநீர் straws, பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் கரண்டிகள், முட்கரண்டி மற்றும் கத்திகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

மக்காத பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதிலும் சிக்கல் உள்ளது.

சுற்றுச்சூழலில் தினமும் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும் வகையில் இந்த பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் அதே வேளையில் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிப்பதே அரசின் நோக்கம்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular