Monday, December 11, 2023
HomeTamilஇலங்கையில் நெற்செய்கையை அதிகரிக்க திட்டம்!

இலங்கையில் நெற்செய்கையை அதிகரிக்க திட்டம்!

இலங்கையின் வருடாந்த நெல் அறுவடையயை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் ஒரு ஹெக்டயரில் இருந்து பெறும் நெல் அறுவடையை 5.5 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 3 வருடங்களுக்குள் 4.7 மெட்ரிக் டொன் வரையும், 5 வருடங்களுக்குள் 5.1 மெட்ரிக் டொன் வரையிலும், 10 வருடங்களுக்குள் 5.5 மெட்ரிக் டொன் வரையிலும் நெல் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலனீ பரசுராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நெற்செய்கையை அதிகரிக்கும் நோக்குடன், நெற்செய்கை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து விவசாயத் தணைக்களம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

தற்போது ஒரு ஹெக்டயரில் இருந்து 3.5 மெட்ரிக் டொன் நெல் அறுவடை செய்யப்படுகிறது.

அதன்படி, விதை உற்பத்தி, மண் பரிசோதனை, கரிம மற்றும் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, நெற்செய்கைக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல், சந்தைப்படுத்தல், பராமரித்தல் மற்றும் கிருமிநாசிகளின்; பயன்பாடு போன்றவற்றை கவனத்திற்கொண்டு நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular