ரஷிய அதிபர் புடின் இந்தியாவை பாராட்டி பேசி உள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆசிய நாடுகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக மாறி வருகிறது.
மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.