மாத்தறை வெல்லமடம் கடற்கரையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) காலை மாணவர்கள் குழுவொன்று கடலில் நீராடச் சென்ற நிலையில், அதில் மூன்று பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மூவர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேலும் அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு கடலில் நீராட சென்றதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஏனைய இருவரை தேடும் பணி தொடர்கின்றது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com