வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் 15,000 லீற்றர் போத்தல் தண்ணீரை அன்பளிப்பு செய்துள்ளது.
குறித்த தண்ணீர் போத்தல்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது அந்த மாவட்டங்களில் உள்ள பல கிணறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் வெள்ள நிலைமையால் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.