Friday, December 8, 2023
HomeTamil2016 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!

2016 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்!

சிறிலங்கா காவல்துறையினரால் கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமாரினால் நினைவுபேருரையும் ஆற்றப்பட்டது. இதன்பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில்குமார், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று இரவு நேரத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில் சிறிலங்கா காவல்துறையினரின் மிலேச்சத்தனமான துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular