Friday, December 8, 2023
HomeTamilவெளிநாட்டுப் பல்கலைக்கழக மருத்துவப் பட்டங்களை ஏற்கும் வகையில் சட்டங்களை உருவாக்க தீர்மானம்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மருத்துவப் பட்டங்களை ஏற்கும் வகையில் சட்டங்களை உருவாக்க தீர்மானம்

முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மருத்துவ ஆணையின் விதிகளை திருத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular