Wednesday, July 24, 2024
HomeTamilSLCERT- சர்வதேச வைரஸ் தடுப்பு மேம்பாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெற தீர்மானம்!!

SLCERT- சர்வதேச வைரஸ் தடுப்பு மேம்பாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெற தீர்மானம்!!

அண்மையில் பல அரசாங்க இணையத்தளங்களை இலக்கு வைத்து ransomware தாக்குதலைத் தொடர்ந்து தொலைந்து போன மின்னஞ்சல்களை மீட்பதற்கு சர்வதேச வைரஸ் தடுப்பு மேம்பாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறவுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பரிமாற்றங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக SLCERT தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசாங்க மின்னஞ்சல் வலையமைப்பு ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டது, அது ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து பல மாத தரவுகளை அழித்துள்ளது.

இந்த தாக்குதல் gov.lk மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் கிட்டத்தட்ட 5,000 மின்னஞ்சல் முகவரிகளை பாதித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular