Wednesday, July 24, 2024
HomeTamilஞானவேலை வறுத்தெடுத்த சமுத்திரகனி!!

ஞானவேலை வறுத்தெடுத்த சமுத்திரகனி!!

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சமுத்திரகனி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “பிரதர்… இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!

நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்…! அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு…

அப்புறம் “பருத்திவீரன்” திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்…அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க… நீங்கதான், “அம்பானி பேமிலியாச்சே..!” காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு சசிகுமார், ஞானவேல் அறிக்கையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular