மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மாத்தறை பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.