Wednesday, July 24, 2024
HomeTamilகுசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை அணி

குசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை அணி

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

லக்னோவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 11 முறை மோதியுள்ளன.

குறித்த 11 போட்டிகளில் அவுஸ்திரேலியா அணி 8 போட்டிகளிலும் இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், மற்றுமொரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து தசுன் ஷானக்க விலகியுள்ள நிலையில், இலங்கை அணியை குசல் மெண்டிஸ் வழிநடத்தவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular