Wednesday, December 6, 2023
HomeTamilதெற்கு காஸாவில் நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் மீண்டும் செயல்படுத்தப்படும்!!

தெற்கு காஸாவில் நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் மீண்டும் செயல்படுத்தப்படும்!!

காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், 2,329 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதற்குப் பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது, மேலும் தரைவழித் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular