Saturday, July 20, 2024
HomeTamil'மிஷன் சாப்டர் 1' படத்தின் டீசர் வெளியானது..!

‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் டீசர் வெளியானது..!

அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி’ என்று மாற்றப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular