கண்டி-கலஹா சுதுவெல்ல பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 5ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர் ஒருவரே நேற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, நேற்றைய நாளின் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்தநிலையில், இன்று மீண்டும் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.