நியூசிலாந்தின் (வடகிழக்கு திசையிலுள்ள) கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் கூறுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com