Saturday, July 20, 2024
HomeTamilஉங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது!!

உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது!!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இதையடுத்து ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular