Friday, December 8, 2023
HomeTamilவாகன அனுமதி மோசடிகள் : அமைச்சர் விளக்கம்!!

வாகன அனுமதி மோசடிகள் : அமைச்சர் விளக்கம்!!

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இலங்கைக்கு அவர்கள் அனுப்பும் பங்களிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதிகள் வழங்கப்பட்டன மற்றும் வங்கிகள் உட்பட தொடர்புடைய அரச நிறுவனங்களால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அனுமதிப்பத்திரங்கள் மற்றவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நாணயக்கார, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகனத்தை இறக்குமதி செய்ததற்காக இலங்கைக்கு திரும்ப வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

சம்பந்தப்பட்ட வாகனம் வேறு ஒருவருக்கு மாற்றப்படாவிட்டால் வேறு யார் வாகனத்தைப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

பல அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் அனுமதிப்பத்திரம் தொடர்பான உண்மையான விபரங்களை அறியாமல் இந்த விடயம் தொடர்பில் சலசலப்பை ஏற்படுத்துவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular