Wednesday, December 6, 2023
HomeTamilபொது மக்களுக்கு எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா கங்கையின் மேல் ஓடை பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் சிறு வெள்ளம் ஏற்பட்டால் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தனகல்ல, கம்பஹா, ஜா-எல மற்றும் வத்தளையை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய நிலப்பரப்பு அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிரதேசத்திலுள்ள மக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அக்குரஸ்ஸ, மாலிம்பட, மாத்தறை மற்றும் திஹாகொட பிரதேச செயலகப் பகுதிகள் உட்பட நில்வலா கங்கையின் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ளவர்களும் சிறிய வெள்ள அபாயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர் மட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழை பெய்தால், வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular