Wednesday, December 6, 2023
HomeTamil12 மணித்தியால நீர்வெட்டு !!

12 மணித்தியால நீர்வெட்டு !!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular