நில்வலா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
பானதுகம பிரதேசத்தின் நீர்மட்டம் 6.87 மீற்றராக உயர்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தற்போது விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 7.50 மீற்றராக உயர்ந்தால் பெரும் வெள்ள நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில்வலா ஆற்றின் பானதுகம மற்றும் தல்கஹகொட பிரதேசங்களில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.