Saturday, July 27, 2024
HomeTamilஅதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,அரசாங்கத்தினால் வாகன உதிரிப்பாகங்களின் விலை, 5 சதவீதத்தால் குறைக்கப்படுமாயின் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என பேருந்து சங்கங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

அவ்வாறின்றி, டீசல் கட்டண குறைப்பின் ஊடாக மாத்திரம் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலை உள்ளதாக, அகில இலங்கை பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

நூறு ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் 10 முதல் 15 ரூபாவினால் விலை குறைக்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு பேருந்து கட்டணத்தில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது. புதிய விலைத் திருத்தத்துக்கு அமைய குறுந்தூர பேருந்துகளுக்கு நாளாந்தம் 750 ரூபாவை மீதப்படுத்த முடியும்.

நெடுந்தூர பேருந்துகள் 100 லீற்றர் டீசலை பெற்றால் ஆயிரத்து 500 ரூபாவை மீதப்படுத்த முடியும் என அகில இலங்கை பேருந்து சங்க சம்மேளனத்தின பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular