Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலாகும் வகையில் கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் புதிய விலை 215 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின் புதிய விலை 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular