அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
12 அத்தியாவசியப் பொருட்களின் (கிலோவொன்றின்) புதிய விலைகள் பின்வருமாறு:
பெரிய வெங்காயம் – 180 ரூபா
வெள்ளை சீனி – 216 ரூபா
சிவப்பு அரிசி – 187 ரூபா
வெள்ளை அரிசி (உள்ளூர்) – 179 ரூபா
சம்பா அரிசி (உள்ளூர்) – 210 ரூபா
வெள்ளை நாடு (உள்ளூர்) – 189 ரூபா
வெள்ளை நாடு (இறக்குமதி) – 180 ரூபா
கீரி சம்பா அரிசி – 239 ரூபா
சிவப்பு பருப்பு – 370 ரூபா
காய்ந்த மிளகாய் – 1730 ரூபா
கோதுமை மாவு – 235 ரூபா
நெத்தலி – 1100 ரூபா