Saturday, July 27, 2024
HomeTamilஅரச மருத்துவர்கள் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

அரச மருத்துவர்கள் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.

வரித் திருத்தம் மற்றும் புதிய வரி அமுலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular