Friday, July 26, 2024
HomeTamilஇந்தியாவில் பறவைக்காய்ச்சல் - முட்டைகளை இறக்குமதிக்கு மறுப்பு!

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் – முட்டைகளை இறக்குமதிக்கு மறுப்பு!

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தொழில்நுட்ப அனுமதி வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

சுகாதார ஆலோசனைக் குழு அறிக்கையின்படி, ஒக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை ஐரோப்பாவில் 2,500 பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, மேலும் 2006 முதல் அவ்வப்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 ஒக்டோபர் 16 அன்று, இந்தியாவின் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பதிவாகியிருந்த நிலையில், அங்கு பறவைக்காய்ச்சல் அவ்வப்போது பதிவாகி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மனிதாபிமானப் பிரச்சினையாக கருதி முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என திணைக்களத்தின் கால்நடை அபிவிருத்தி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular