Saturday, July 27, 2024
HomeTamilஇன்புளுவன்சா நோய் பரவலில் அதிகரிப்பு!

இன்புளுவன்சா நோய் பரவலில் அதிகரிப்பு!

இன்புளுவன்சா நோய் பரவலில் அதிகரிப்புத் தன்மை பதிவாகியுள்ளது.

இன்புளுவன்சா உள்ளிட்ட மேலும் சில வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதனால், உரிய சுகாதார பழக்கங்களை பின்பற்றுமாறு குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால், இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மற்றுமொரு வைரஸ் பரவலும், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகளில், சிறார்கள் மற்றும் பெரியோர்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும், அது எவ்வகையான பிறழ்வு என்பதை சரியான முறையில் அடையாளம் காணமுடியாதுள்ளது.

கடந்த காலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்து.

எனினும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற போதிலும் அதனை அணிவது முக்கியமானதாகும்.

குறிப்பாக நோய்ப்பரவல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம், சிறார்கள் மற்றும் பெரியோர்களிடம் குறித்த நோய் நிலைமையை கட்டுப்படுத்தலாம் என குழந்தைகளுக்கான சுவாச நோய் விஷேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular