Saturday, July 27, 2024
HomeTamilஇன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைகிறது!

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை செய்யும் இன்சி சீமெந்து நிறுவனத்தின் சீமெந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டு புதிய விலையாக 2,750 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையுடைய இன்சி சன்ஸ்தா மற்றும் இன்சி மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து மூடையின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்படும் என இன்சி சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

நிர்மாணத் தொழில் துறையைக்கு உதவும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிறுவனம் சீமெந்தின் புதிய விலையாக 2,750 ரூபாயை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular