Saturday, July 27, 2024
HomeTamilஇறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சஹீன் சாஹ் அப்ரிடி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதேவேளை, டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 53 (35) ஓட்டங்களுடன் இனிங்ஸை நகர்த்திய நியூசிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. அப்ரிடி 4-0-24-2, மொஹமட் நவாஸ் 2-0-12-1, நசீம் ஷா 4-0-30-0, மொஹமட் வஸிம் 2-0-15-0, ஹரிஸ் றாஃப் 4-0-32-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வானின் 57 (43), பாபர் அஸாமின் 53 (42), மொஹமட் ஹரிஸின் 30 (26) ஓட்டங்களோடு 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், மிற்செல் சான்ட்னெர் 4-0-26-1, இஷ் சோதி 4-0-26-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக றிஸ்வான் தெரிவானார்.

இதேவேளை, நாளைய தினம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular