Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கையில் புதிய வைரஸ்!!

இலங்கையில் புதிய வைரஸ்!!

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது.

எனவே சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார்

“மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதுதான், இது போன்ற விஷயங்களில் மிக முக்கியமானது. ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நீங்கள் சுடுநீரை குடித்துவிட்டு பாரம்பரிய விஷயங்களை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்தால், உங்களுக்கு விசித்திரமான மருந்து எதுவும் தேவையில்லை. உங்களுக்கு காய்ச்சல் உள்ளது. நீங்கள் பாராசிட்டமோல் பயன்படுத்தலாம். உங்களால் அதை பெற முடியவில்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular