Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை!

இலங்கை தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை!

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 5.7 மில்லியன் மக்கள், மொத்த சனத்தொகையில் 26 வீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள 11 சதவீதமான குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாகவும் சங்கம், வருமான மட்டம் 62 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சனத்தொகையில் 49 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதுடன், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போசணைக் குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular