Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விற்பனை விலை 130 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகும்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாலும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை 80 முதல் 100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலும் குறைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 205 ரூபாவாக குறைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular