Friday, July 26, 2024
HomeTamilஉலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் மற்றும் இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கமும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனமும் பசுமை வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் குறித்த திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு ஏதுவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் GGGI சார்பாக அதன் பணிப்பாளர் நாயகம் பிராங் றிஜ்ஸ்பெர்மன் (Frank Rijsberman ) ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

GGGIயின் உறுப்பினராக இலங்கை 2019 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான மற்றும் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் GGGI தன்னை அர்ப்பணித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular