Saturday, July 27, 2024
HomeTamilஎண்ணெய் விலை தொடர்பில் புதிய தீர்மானம்!

எண்ணெய் விலை தொடர்பில் புதிய தீர்மானம்!

ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த G 07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்தாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமல்படுத்தப்படும் என ஜி07 குழுமம் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் விலையை சந்தை விலையை விட 5% குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 60 டொலர்களுக்கு மேல் செலுத்துவதை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியமும் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று (02) 64 டொலர்களாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் போரில் ரஷ்யா இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் இந்த விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular