Saturday, July 27, 2024
HomeTamilஎரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!

எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனம் வியாழக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவினால் குறைப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,409 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை 80 ரூபாவினாலும், 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை 38 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1770 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 822 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular