Saturday, July 27, 2024
HomeTamilஎரிவாயு விலை அதிகரிப்பு!!

எரிவாயு விலை அதிகரிப்பு!!

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4360 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோகிராம் எரிவாயுவின் கொள்கலன் 1750 ரூபாவுக்கு, 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular