Saturday, July 27, 2024
HomeTamilஎரிவாயு விலை குறைப்பு!!

எரிவாயு விலை குறைப்பு!!

இன்று முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 220 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விற்பனை விலை 5,080 ரூபாவாகும்.

அதேபோல், 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 88 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விற்பனை விலை 2,032 ரூபாவாகும்.

ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளை அறிந்து கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular