Saturday, July 27, 2024
HomeTamilஒரு வருடத்திற்கு வரி முறையை தொடரவேண்டும்- வேறு வழியில்லை!

ஒரு வருடத்திற்கு வரி முறையை தொடரவேண்டும்- வேறு வழியில்லை!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை (IMF) தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவுடனான நேர்காணலின் போதே, ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த பிற சீர்திருத்தங்கள் என்பன நிதியுதவி உறுதிப்படுத்தல் செயல்முறையின் பகுதிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வரி முறையை தொடரவேண்டும் என்று முன்மொழிந்துள்ள அவர், 80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி முறையே 60% மற்றும் 40% ஆக மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular