Sunday, December 10, 2023
HomeTamilகாவல்துறை உத்தியோகத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு!

காவல்துறை உத்தியோகத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருக்குலைந்த நிலையில் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை காவல் நிலையத்தில் கடமையாற்றி வருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்து வரும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து உருக்குலைந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவு மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular