Saturday, July 27, 2024
HomeTamilகோழி இறைச்சி விலையில் திடீர் மாற்றம்!

கோழி இறைச்சி விலையில் திடீர் மாற்றம்!

சந்தையில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கேள்விக்கான விநியோகம் இன்மையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான விலைகள் வெகுவாக அதிகரித்திருந்தன.

எவ்வாறாயினும், அதிக விலைக்காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் செலுத்துவதில்லை என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular